பொதுபிரிவினருக்கான இளநிலை மீன்வள அறிவியல் (சுயநிதி) பட்டப்படிப்பிற்கான இணையதள கலந்தாய்வானது 23.03.2022 முதல் 27.03.2022 வரை நடைபெறும்.
இளநிலை மீன்வள அறிவியல் (சுயநிதி) பட்டப்படிப்பிற்கான இணையதள கலந்தாய்விற்கான அட்டவணை மற்றும் கட்ஆப் தகவல்களை பதிவிறக்கம் செய்ய கீழ்கண்ட இணைப்பை அழுத்தவும்.
Counselling Schedule & Cut-off markஇளநிலை மீன்வள அறிவியல் (சுயநிதி) பட்டப்படிப்பிற்கான இணையதள கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டவர்களின் விவரங்களை பதிவிறக்கம் செய்ய கீழ்கண்ட இணைப்பை அழுத்தவும்.
B.F.Sc. (Self-finance) |
பொது பிரிவினருக்கான இணையதள கலந்தாய்விற்கு தேர்வு செய்யப்பட்ட தகுதியான விண்ணப்பத்தாரர்களுக்கு அவர்களின் பதிவு செய்யப்பட்ட செல்லிடைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலமாக மட்டுமே கலந்தாய்வு பற்றிய தகவல் தெரிவிக்கப்படும்.தனியான அழைப்பு கடிதம் தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது.
இளநிலை மீன்வள அறிவியல் (சுயநிதி) பட்டப்படிப்பிற்கான பொது பிரிவினருக்கான இணையதள கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பத்தாரர்கள் 23.03.2022 காலை 9.00 மணி முதல் 27.03.2022 மாலை 5.00 மணி வரை தங்களின் உள்நுழை அடையாள எண் (Login ID) மற்றும் பதிவு செய்யப்பட்ட செல்லிடைபேசி எண் மூலம் தங்களுக்கு விருப்பமான பட்டப்படிப்புகளை தேர்வு செய்யவும். 31.01.2022ம் தேதி மாலை 5.00 மணிக்குள் பட்டப்படிப்பு மற்றும் கல்லூரியை கவனத்துடன் தேர்வு செய்ய வேண்டும்.
விண்ணப்பத்தாரர்கள் "Login for B.F.Sc. (SF) Counselling" பொத்தானை அழுத்தி உள்நுழையவும்.>
ஒன்றுக்கும் மேற்பட்டபட்ட படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களுக்கு விருப்பமான படிப்புகளை கவனத்துடன் தேர்வு செய்ய வேண்டும்.
விண்ணப்பத்தாரர்கள் HSC மதிப்பெண் சான்றிதழ் மற்றும் வகுப்பு(Community) சான்றிதழை (500 KB க்குமிகாமல்) பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தங்களுக்கு விருப்பமான பட்டப்படிப்பு மற்றும் கல்லூரியை தேர்வு செய்த பின்னர் திரும்பபெற இயலாத இணையதள கலந்தாய்வு கட்டணமாக ரூபாய். 500/-(for SC/SCA/ST) அல்லது ரூபாய் 1000/- (for Others) இணையதளம் வாயிலாகமட்டுமே செலுத்த வேண்டும்.
விண்ணப்பத்தாரர்கள் தாங்கள் விரும்பிய படிப்புகளை தேர்வு செய்துள்ளதை படிவம் சமர்பிக்கும் முன் உறுதி செய்து கொள்ளவும். சமர்பித்த பிறகு எந்த ஒரு மாற்றமும் செய்ய இயலாது.
சேர்க்கைக்கான தகவல் 28.03.2022 அன்று பதிவு செய்யப்பட்ட செல்லிடைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். தற்காலிக சேர்க்கை ஆணை கடிதத்தை, உள்நுழை அடையாள எண் மற்றும் செல்லிடைபேசி எண் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்யலாம்.